நீதி கோரி கொதித்தெழும் "பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்" ஜானி டெப்பின் ரசிகர்கள்
ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பை சமையல் பாத்திரங்களால் அடித்ததை அவரது முன்னாள் மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான அம்பெர் ஹெர்ட் ஒப்புக்கொண்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு அம்பெர் ஹெர்டை திருமணம் செய்துகொண்ட ஜானி டெப், 2017 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். மேலும், அம்பர் ஹெர்ட் தன்னை தாக்கியதாகவும் அவரால் தனது புகழுக்கு களங்கம் விளைந்துள்ளதாகவும் 350 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் ஜானி டெப்பை தான் தாக்கியதை ஒப்புக்கொள்ளும் வகையிலும் மன்னிப்பு கோரும் வகையிலும் அம்பர் ஹெர்ட் பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. இதையடுத்து ஜானி டெப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள், JusticeForJohnnyDepp ஹாஷ்டேக்கை உருவாக்கி சமூகவலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
Comments